இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

727ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْحَاقَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ صَلَّيْتُ أَنَا وَيَتِيمٌ، فِي بَيْتِنَا خَلْفَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأُمِّي أُمُّ سُلَيْمٍ خَلْفَنَا‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நானும் ஓர் அனாதையும் (சேர்ந்து) எங்கள் வீட்டில் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுதோம். என் தாயார் உம்மு சுலைம் எங்களுக்குப் பின்னால் (நின்று) தொழுதார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
871ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ إِسْحَاقَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم فِي بَيْتِ أُمِّ سُلَيْمٍ، فَقُمْتُ وَيَتِيمٌ خَلْفَهُ، وَأُمُّ سُلَيْمٍ خَلْفَنَا‏.‏
அனஸ் (ரழி) அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் உம்மு சுலைம் (ரழி) அவர்களின் வீட்டில் (இமாமாக) தொழுதார்கள். நானும் ஒரு அநாதையும் அவர்களுக்குப் பின்னால் (ஜமாஅத்தாகத் தொழுவதற்காக) நின்றோம். உம்மு சுலைம் (ரழி) அவர்கள் எங்களுக்குப் பின்னால் நின்றார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح