இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5818ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ أَبِي بُرْدَةَ، قَالَ أَخْرَجَتْ إِلَيْنَا عَائِشَةُ كِسَاءً وَإِزَارًا غَلِيظًا فَقَالَتْ قُبِضَ رُوحُ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي هَذَيْنِ‏.‏
அபூ புர்தா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஆயிஷா (ரழி) அவர்கள் எங்களிடம் ஒரு கிஸாவையும் ஓர் இஸாரையும் கொண்டு வந்து, "நபி (ஸல்) அவர்கள் இவை இரண்டையும் அணிந்திருந்த நிலையில் இறந்தார்கள்" என்று கூறினார்கள். (கிஸா, ஒரு சதுர வடிவ கருப்பு கம்பளித் துணி. இஸார், உடலின் கீழ்ப் பாதியை மறைக்கும் ஒரு துணி ஆடை).

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2080 bஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ، وَيَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، جَمِيعًا عَنِ
ابْنِ عُلَيَّةَ، قَالَ ابْنُ حُجْرٍ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ أَبِي بُرْدَةَ،
قَالَ أَخْرَجَتْ إِلَيْنَا عَائِشَةُ إِزَارًا وَكِسَاءً مُلَبَّدًا فَقَالَتْ فِي هَذَا قُبِضَ رَسُولُ اللَّهِ صلى الله
عليه وسلم ‏.‏ قَالَ ابْنُ حَاتِمٍ فِي حَدِيثِهِ إِزَارًا غَلِيظًا ‏.‏
அபூ புர்தா அவர்கள் அறிவித்தார்கள்: ஆயிஷா (ரழி) அவர்கள், முலப்பதா எனும் துணியால் செய்யப்பட்ட கீழாடையையும் மேலாடையையும் எங்களுக்கு எடுத்து வந்து காட்டி, கூறினார்கள்:
இந்த (ஆடைகளில்) தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

இப்னு ஹாத்திம் (அறிவிப்பாளர்களில் ஒருவர்) அவர்களின் அறிவிப்பில் விளக்கம்: கரடுமுரடான துணியாலான கீழாடை.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح