இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

475ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مُسْتَلْقِيًا فِي الْمَسْجِدِ، وَاضِعًا إِحْدَى رِجْلَيْهِ عَلَى الأُخْرَى‏.‏ وَعَنِ ابْنِ شِهَابٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ قَالَ كَانَ عُمَرُ وَعُثْمَانُ يَفْعَلاَنِ ذَلِكَ‏.‏
அப்பாத் பின் தமீம் அவர்கள் அறிவித்தார்கள்:

அவர்களுடைய மாமா (ரழி) அவர்கள் கூறினார்கள், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் ஒரு காலை மற்றொரு காலின் மீது போட்டவாறு மல்லாந்து படுத்திருந்ததை கண்டேன்.”

ஸயீத் பின் அல்-முஸைய்யப் அவர்கள், உமர் (ரழி) அவர்களும் உஸ்மான் (ரழி) அவர்களும் அவ்வாறே செய்வார்கள் என்று அறிவித்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
6287ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، قَالَ أَخْبَرَنِي عَبَّادُ بْنُ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْمَسْجِدِ مُسْتَلْقِيًا، وَاضِعًا إِحْدَى رِجْلَيْهِ عَلَى الأُخْرَى‏.‏
அப்பாஸ் பின் தமீம் அவர்களின் பெரிய தந்தை (ரழி) அறிவித்தார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை பள்ளிவாசலில் மல்லாந்து படுத்திருந்த நிலையில், தமது ஒரு காலை மற்றொரு காலின் மீது போட்டுக் கொண்டிருக்கக் கண்டேன்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح