அப்துல்லாஹ் (இப்னு மஸ்ஊத்) (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அஃமஷ் (ரஹ்) அவர்களின் ஹதீஸில் உள்ளதைப் போன்றே (இதிலும்) அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முகீராவிடமிருந்து ஷுஅபா அறிவிக்கும் ஹதீஸில், '(முகீரா கூறினார்:) நான் அபூ வாயில் அவர்களிடமிருந்து செவியுற்றேன்' என்று இடம்பெற்றுள்ளது.