حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، قَالَ حَدَّثَنِي ابْنُ أَبِي حَازِمٍ، عَنْ يَزِيدَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ إِذَا اسْتَيْقَظَ ـ أُرَاهُ ـ أَحَدُكُمْ مِنْ مَنَامِهِ فَتَوَضَّأَ فَلْيَسْتَنْثِرْ ثَلاَثًا، فَإِنَّ الشَّيْطَانَ يَبِيتُ عَلَى خَيْشُومِهِ .
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரேனும் தமது தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து, (உளூச் செய்ய நாடினால் அல்லது உளூச் செய்யும்போது) அவர் மூன்று முறை மூக்கினுள் தண்ணீரைச் செலுத்திச் சிந்தட்டும். ஏனெனில், ஷைத்தான் இரவு முழுவதும் அவரது மூக்கின் உட்புற மேல் பகுதியில் தங்கியிருக்கிறான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"உங்களில் ஒருவர் தமது உறக்கத்திலிருந்து விழித்து உளூச் செய்தால், அவர் மூன்று முறை (மூக்கில் நீர் செலுத்தி) சிந்தட்டும். ஏனெனில் ஷைத்தான் அவரது நாசித்துவாரத்தில் இரவைக் கழிக்கிறான் (அதன் மூலம் தூக்கக் கலக்கத்தையும் சோம்பலையும் ஏற்படுத்துகிறான்)."