இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

588ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا ابْنُ بِشْرٍ، عَنْ مِسْعَرٍ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ قُلْتُ بِأَىِّ شَىْءٍ كَانَ يَبْدَأُ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ بَيْتَهُ قَالَتْ بِالسِّوَاكِ ‏.‏
ஷுரைஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் தமது இல்லத்தில் நுழைந்ததும் முதலில் என்ன செய்வார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "பல் துலக்குவார்கள் (மிஸ்வாக் செய்வார்கள்)" என்று பதிலளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
290சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحِ بْنِ هَانِئٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَ قُلْتُ أَخْبِرِينِي بِأَىِّ، شَىْءٍ كَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ يَبْدَأُ إِذَا دَخَلَ عَلَيْكِ قَالَتْ كَانَ إِذَا دَخَلَ يَبْدَأُ بِالسِّوَاكِ ‏.‏
ஷுரைஹ் பின் ஹானிஃ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"நான் ஆயிஷா (ரழி) அவர்களிடம், 'நபி (ஸல்) அவர்கள் உங்களிடம் (வீட்டிற்குள்) நுழையும்போது எதைக்கொண்டு (தமது செயல்களை) ஆரம்பிப்பார்கள் என்று எனக்குக் கூறுங்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், '(வீட்டிற்குள்) நுழைந்தால் மிஸ்வாக்கைக் கொண்டு ஆரம்பிப்பார்கள்' என்று கூறினார்கள்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)