حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا حَنْظَلَةُ، قَالَ سَمِعْتُ سَالِمًا، يَقُولُ سَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ إِذَا اسْتَأْذَنَكُمْ نِسَاؤُكُمْ إِلَى الْمَسَاجِدِ فَأْذَنُوا لَهُنَّ .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: "உங்கள் பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கேட்டால், அவர்களுக்கு அனுமதி அளியுங்கள்."
حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْمُقْرِئُ، حَدَّثَنَا سَعِيدٌ، - يَعْنِي ابْنَ أَبِي أَيُّوبَ - حَدَّثَنَا كَعْبُ بْنُ عَلْقَمَةَ، عَنْ بِلاَلِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاَ تَمْنَعُوا النِّسَاءَ حُظُوظَهُنَّ مِنَ الْمَسَاجِدِ إِذَا اسْتَأْذَنُوكُمْ فَقَالَ بِلاَلٌ وَاللَّهِ لَنَمْنَعُهُنَّ . فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ أَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَتَقُولُ أَنْتَ لَنَمْنَعُهُنَّ .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெண்கள் உங்களிடம் அனுமதி கேட்டால், பள்ளிவாசல்களில் அவர்களுடைய உரிமையை (அங்கு சென்று வணங்குவதில்) அவர்களுக்கு மறுக்காதீர்கள்.
பிலால் அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நாங்கள் நிச்சயமாக அவர்களைத் தடுப்போம்.
அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் (பிலாலிடம்) கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறினார்கள் என்று நான் கூறுகிறேன், நீங்களோ, நாங்கள் நிச்சயமாக அவர்களைத் தடுப்போம் என்கிறீர்களே!