حَدَّثَنَا أَبُو كَامِلٍ، حَدَّثَنَا يَزِيدُ، - يَعْنِي ابْنَ زُرَيْعٍ - عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم النُّخَاعَةُ فِي الْمَسْجِدِ . فَذَكَرَ مِثْلَهُ .
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பள்ளிவாசலில் சளியை உமிழ்வது (தவறாகும்)... பின்னர் அறிவிப்பாளர் இதே கருத்தில் ஹதீஸின் மீதமுள்ள பகுதியையும் அறிவித்தார்.
الثالث عنه قال: قال النبي صلى الله عليه وسلم : عرضت علي أعمال أمتي حسنها وسيئها، فوجدت في محاسن أعمالها الأذى يماط عن الطريق، ووجدت في مساوىء أعمالها النخاعة تكون في المسجد لا تدفن ((رواه مسلم)).
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது சமுதாயத்தாரின் நன்மைகளும் தீமைகளுமான செயல்கள் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டன. பாதையிலிருந்து தீங்கு தரும் பொருட்களை (கற்கள், முட்கள் போன்றவற்றை) அகற்றுவதை அவர்களின் நற்செயல்களிலும், பள்ளிவாசலில் (தரையில்) புதைக்கப்படாமல் (அல்லது அகற்றப்படாமல்) விடப்பட்ட சளியை அவர்களின் தீயசெயல்களிலும் நான் கண்டேன்.