அபுஸ் ஸுபைர் அவர்கள் அறிவித்தார்கள்: நான் அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரழி) அவர்கள் இந்த மிம்பரில் (மக்களுக்கு) உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையின் அல்லது தொழுகைகளின் முடிவில் ஸலாம் கொடுத்ததும் (பின்வரும் துஆவை) கூறுவார்கள்" என்று சொல்லக் கேட்டேன். பிறகு (அறிவிப்பாளர்) ஹிஷாம் இப்னு உர்வா அவர்களின் ஹதீஸில் உள்ளதைப் போன்றே (அந்த துஆவை) குறிப்பிட்டார்.