இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1450ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَيَّارِ بْنِ سَلاَمَةَ، قَالَ سَمِعْتُ أَبَا بَرْزَةَ، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاَ يُبَالِي بَعْضَ تَأْخِيرِ صَلاَةِ الْعِشَاءِ إِلَى نِصْفِ اللَّيْلِ وَكَانَ لاَ يُحِبُّ النَّوْمَ قَبْلَهَا وَلاَ الْحَدِيثَ بَعْدَهَا ‏.‏ قَالَ شُعْبَةُ ثُمَّ لَقِيتُهُ مَرَّةً أُخْرَى فَقَالَ أَوْ ثُلُثِ اللَّيْلِ ‏.‏
அபூ பர்ஸா (ரழி) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷா தொழுகையை நள்ளிரவு வரை தாமதப்படுத்துவதை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. மேலும், அத்தொழுகைக்கு முன் உறங்குவதையும், அதற்குப் பின் (உலக விஷயங்களைப்) பேசுவதையும் அவர்கள் விரும்பவில்லை."
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஃபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னர் நான் அவரை (சையார் பின் ஸலாமாவை) மற்றொரு முறை சந்தித்தபோது, "அல்லது இரவின் மூன்றில் ஒரு பகுதி வரை (தாமதப்படுத்துவதை ஒரு பொருட்டாகக் கருதவில்லை)" என்று கூறினார்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح