وَحَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ، بْنِ الْمُسَيَّبِ عَنِ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ الْمَيِّتُ يُعَذَّبُ فِي قَبْرِهِ بِمَا نِيحَ عَلَيْهِ .
உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"இறந்தவர், அவருக்காக ஒப்பாரி வைக்கப்படுவதன் காரணமாகத் தனது கப்ரில் வேதனை செய்யப்படுகிறார்" (இது, இறந்தவர் தனது வாழ்நாளில் ஒப்பாரி வைக்கப்பட வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தாலோ அல்லது அதற்கு சம்மதித்திருந்தாலோ மட்டுமே பொருந்தும்.) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்: "இறந்தவர் அவருக்காக ஒப்பாரி (சத்தமிட்டு அழுதல், புலம்புதல், முகத்தில் அறைதல் போன்ற இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட செயல்களுடன் கூடிய அழுகை) வைக்கப்படுவதால் அவருடைய கப்ரில் வேதனை செய்யப்படுகிறார்."
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
"இறந்தவர், அவருக்காக ஒப்பாரி வைக்கப்படுவதால் வேதனை செய்யப்படுகிறார்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
وَعَنْ ابْن عُمَرَ - رضى الله عنه - عَنِ اَلنَّبِيِّ - صلى الله عليه وسلم -قَالَ: { اَلْمَيِّتُ يُعَذَّبُ فِي قَبْرِهِ بِمَا نِيحَ عَلَيْهِ } مُتَّفَقٌ عَلَيْه ِ [1] .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “இறந்தவருக்காக ஒப்பாரி வைக்கப்படுவதால், அவர் தன் கப்ரில் வேதனை செய்யப்படுகிறார் (அவர் உயிருடன் இருந்தபோது அதற்கு சம்மதித்திருந்தால் அல்லது அதை ஏவியிருந்தால், அல்லது அதைத் தடுக்காதிருந்தால்).” இதனை புகாரியும் முஸ்லிமும் அறிவிக்கின்றனர்.