அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நீங்கள் அதைச் செய்யாவிட்டாலும் (அதாவது, 'அஸ்ல்' எனும் கருத்தடை முறையைச் செய்யாவிட்டாலும்) உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. ஏனெனில், அது (குழந்தை பிறப்பது என்பது அல்லாஹ்வால்) தீர்மானிக்கப்பட்ட விதியாகும்."