இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

25415முஸ்னது அஹ்மத்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ حُمَيْدِ بْنِ نَافِعٍ عَنْ زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ قَالَتْ أُمُّ سَلَمَةَ لِعَائِشَةَ إِنَّهُ يَدْخُلُ عَلَيْكِ الْغُلَامُ الْأَيْفَعُ الَّذِي مَا أُحِبُّ أَنْ يَدْخُلَ عَلَيَّ فَقَالَتْ عَائِشَةُ أَمَا لَكِ فِي رَسُولِ اللهِ ﷺ أُسْوَةٌ حَسَنَةٌ؟ قَالَتْ إِنَّ امْرَأَةَ أَبِي حُذَيْفَةَ قَالَتْ يَا رَسُولَ اللهِ إِنَّ سَالِمًا يَدْخُلُ عَلَيَّ وَهُوَ رَجُلٌ وَفِي نَفْسِ أَبِيحُذَيْفَةَ مِنْهُ شَيْءٌ فَقَالَ رَسُولُ اللهِ ﷺ أَرْضِعِيهِ حَتَّى يَدْخُلَ عَلَيْكِ
ஸைனப் பின்த் உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

உம்மு ஸலமா (ரழி) அவர்கள் ஆயிஷா (ரழி) அவர்களிடம், "(பருவ வயதை நெருங்கிய) வாலிபச் சிறுவன் உங்களிடம் வருகிறான்; ஆனால், அவன் என்னிடம் வருவதை நான் விரும்புவதில்லை" என்று கூறினார்கள்.

அதற்கு ஆயிஷா (ரழி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (நடைமுறையில்) உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இல்லையா?" என்று கேட்டார்கள். (மேலும் ஆயிஷா (ரழி) அவர்கள் பின்வரும் நிகழ்வைக் கூறினார்கள்:)

அபூஹுதைஃபா (ரழி) அவர்களின் மனைவி (ஸஹ்லா பின்த் சுஹைல் - ரழி - அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து), "அல்லாஹ்வின் தூதரே! சாலிம் (வாலிப) ஆணாக வளர்ந்துவிட்ட நிலையில் என்னிடம் வருகிறான். (அவன் வருவதால்) அபூ ஹுதைஃபாவின் உள்ளத்தில் ஏதோ (சங்கடம்) உள்ளது" என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவன் உனக்கு மஹ்ரமாகி, தடையின்றி) உன்னிடம் வருவதற்காக, அவனுக்கு நீ பாலூட்டுவாயாக!" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : இஸ்னாதுஹு ஸஹீஹ் (இதன் அறிவிப்பாளர் தொடர் ஆதாரபூர்வமானது)
إسناده صحيح