حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ دَاوُدَ بْنِ الْحُصَيْنِ، عَنْ أَبِي سُفْيَانَ، مَوْلَى ابْنِ أَبِي أَحْمَدَ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْمُزَابَنَةِ وَالْمُحَاقَلَةِ. وَالْمُزَابَنَةُ اشْتِرَاءُ الثَّمَرِ بِالتَّمْرِ فِي رُءُوسِ النَّخْلِ.
அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸாபனா மற்றும் முஹாகலாவைத் தடைசெய்தார்கள். முஸாபனா என்பது, பேரீச்சை மரங்களில் உள்ள (அறுவடை செய்யப்படாத) கனிகளை, (அறுவடை செய்யப்பட்ட) காய்ந்த பேரீச்சம்பழங்களுக்குப் பகரமாக வாங்குவதாகும்.
அபூ சயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் கூறியதாவது:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஹாகலாவைத் தடை செய்தார்கள்.”
முஹாகலா என்பது நிலத்தைக் குத்தகைக்கு விடுவதாகும்.