حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، وَأَبُو أُسَامَةَ وَمُحَمَّدُ بْنُ عُبَيْدٍ عَنْ عُبَيْدِ اللَّهِ، - أَوْ قَالَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ - عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ يُكْرِي أَرْضًا لَهُ مَزَارِعًا فَأَتَاهُ إِنْسَانٌ فَأَخْبَرَهُ عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ كِرَاءِ الْمَزَارِعِ فَذَهَبَ ابْنُ عُمَرَ وَذَهَبْتُ مَعَهُ حَتَّى أَتَاهُ بِالْبَلاَطِ فَسَأَلَهُ عَنْ ذَلِكَ فَأَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ كِرَاءِ الْمَزَارِعِ فَتَرَكَ عَبْدُ اللَّهِ كِرَاءَهَا .
நாஃபிஃ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
இப்னு உமர் (ரலி) அவர்கள் தமக்குச் சொந்தமான நிலங்களை விவசாயத்திற்காகக் குத்தகைக்கு விடுவது வழக்கம். அப்போது ஒருவர் அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விவசாயத்திற்காக நிலத்தைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்துள்ளார்கள்" என்று ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாகத் தெரிவித்தார். (இதைக் கேள்விப்பட்ட) இப்னு உமர் (ரலி) அவர்கள் (ராஃபிஉ பின் கதீஜ் அவர்களைச் சந்திக்கச்) சென்றார்கள். நானும் அவர்களுடன் சென்றேன். 'பலாத்' என்னுமிடத்தில் அவர்களைச் சந்தித்து, அதுபற்றிக் கேட்டார்கள். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விவசாயத்திற்காக நிலத்தைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்துள்ளார்கள்" என்று அவர்களிடம் கூறினார்கள். எனவே, அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை விட்டுவிட்டார்கள்.