இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4663ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، قَالَ هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ النَّاسُ تَبَعٌ لِقُرَيْشٍ فِي هَذَا الشَّأْنِ مُسْلِمُهُمْ تَبَعٌ لِمُسْلِمِهِمْ وَكَافِرُهُمْ تَبَعٌ لِكَافِرِهِمْ ‏ ‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“இந்த (ஆட்சி) விஷயத்தில் மக்கள் குறைஷிகளைப் பின்பற்றுபவர்கள் ஆவார்கள். அவர்களில் உள்ள முஸ்லிம்கள் குறைஷிகளில் உள்ள முஸ்லிம்களையும், அவர்களில் உள்ள காஃபிர்கள் குறைஷிகளில் உள்ள காஃபிர்களையும் பின்பற்றுவார்கள்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح