இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

654ரியாதுஸ் ஸாலிஹீன்
وعن عائشة رضي الله عنها قالت‏:‏ سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في بيتى هذا‏:‏ “اللهم من ولى من أمر أمتى شيئاً فشق عليهم، فاشقق عليه ومن ولى من أمر أمتى شيئاً، فرفق بهم، فارفق به” ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது இந்த வீட்டில், "இறைவா! என் சமுதாயத்தின் விவகாரங்களில் எதையேனும் ஒன்றுக்கு பொறுப்பேற்று, அவர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்துபவருக்கு நீயும் சிரமத்தை ஏற்படுத்துவாயாக! என் சமுதாயத்தின் விவகாரங்களில் எதையேனும் ஒன்றுக்கு பொறுப்பேற்று, அவர்களிடம் மென்மையாக நடந்து கொள்பவரிடம் நீயும் மென்மையாக நடந்து கொள்வாயாக!" என்று கூறுவதை நான் செவியுற்றேன்.