وَعَنْ اِبْنِ مَسْعُودٍ - رضى الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم -{ إِذَا كُنْتُمْ ثَلَاثَةً, فَلَا يَتَنَاجَى اِثْنَانِ دُونَ اَلْآخَرِ, حَتَّى تَخْتَلِطُوا بِالنَّاسِ; مِنْ أَجْلِ أَنَّ ذَلِكَ يُحْزِنُهُ } مُتَّفَقٌ عَلَيْهِ, وَاللَّفْظُ لِمُسْلِمٍ. [1] .
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நீங்கள் மூவராக இருக்கும்போது, மற்றவர்களுடன் நீங்கள் கலக்கும் வரை இருவர் மட்டும் மூன்றாமவரை விட்டுவிட்டு இரகசியமாகப் பேச வேண்டாம். ஏனெனில், அது அவரை கவலையடையச் செய்யும்." (முத்தஃபகுன் அலைஹி. இதன் வாசகம் முஸ்லிம் நூலில் உள்ளதாகும்).
وعن ابن مسعود رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إذا كنتم ثلاثة، فلا يتناجى اثنان دون الآخر حتى تختلطوا بالناس، من أجل أن ذلك يحزنه ((متفق عليه)).
இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நீங்கள் மூவராக இருக்கும்போது, நீங்கள் மக்களுடன் கலந்துவிடும் வரை, மூன்றாமவரை விட்டுவிட்டு இருவர் மட்டும் தனியாக உரையாட வேண்டாம். ஏனெனில் அது அவருக்கு வருத்தத்தை அளிக்கும் (அவரைப் புறக்கணிப்பதாகவோ அல்லது அவரைப் பற்றிப் பேசுவதாகவோ அவர் எண்ணி வருந்தக்கூடும் என்பதால்)."