அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெப்பமான ஒரு நாளில், விபச்சாரப் பெண் ஒருத்தி ஒரு நாயைக் கண்டாள். தாகத்தின் கொடுமையால் நாக்கைத் தொங்கவிட்டபடி அந்த நாய் ஒரு கிணற்றைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. (இதைக் கண்ட) அப்பெண் தன் தோல் காலுறையைக் கழற்றி, (அதன் மூலம் கிணற்றிலிருந்து) தண்ணீர் இறைத்து (அந்த நாய்க்குக் குடிக்கக் கொடுத்தாள்). அவளின் (இந்த நற்செயலுக்காக) அவளுக்குப் பாவமன்னிப்பு வழங்கப்பட்டது.
ஹதீஸ் தரம் : இஸ்னாதுஹு ஸஹீஹ் (இதன் அறிவிப்பாளர் தொடர் ஆதாரபூர்வமானது)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"கடுமையான வெப்பமான ஒரு நாளில், ஒரு விலைமகள் ஒரு கிணற்றைச் சுற்றி வந்து கொண்டிருந்த ஒரு நாயைக் கண்டாள். தாகத்தினால் அது தனது நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்தது. உடனே அவள் (தனது காலணியைக் கொண்டு) அதற்காகத் தண்ணீர் இறைத்து, அதற்குப் புகட்டினாள். அவளது (இச்செயலுக்காக) அவளுக்குப் பாவமன்னிப்பு வழங்கப்பட்டது."