حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ لاَ يَقُلْ أَحَدُكُمْ أَطْعِمْ رَبَّكَ، وَضِّئْ رَبَّكَ، اسْقِ رَبَّكَ. وَلْيَقُلْ سَيِّدِي مَوْلاَىَ. وَلاَ يَقُلْ أَحَدُكُمْ عَبْدِي أَمَتِي. وَلْيَقُلْ فَتَاىَ وَفَتَاتِي وَغُلاَمِي .
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் எவரும் (ஓர் அடிமையிடம்), 'உமது ரப்புக்கு (எஜமானருக்கு) உணவளி, உமது ரப்புக்கு உளூச் செய்துவிடு, உமது ரப்புக்கு நீர் புகட்டு' என்று கூற வேண்டாம். மாறாக, (அடிமை தன் எஜமானரைக் குறிப்பிடும்போது) 'என் தலைவர் (ஸய்யிதீ), என் எஜமானர் (மவ்லாய)' என்று கூறட்டும். மேலும், உங்களில் எவரும் (தமது அடிமையைப் பார்த்து), 'என் அடிமை (அப்தீ), என் பெண் அடிமை (அமதீ)' என்று கூற வேண்டாம். மாறாக, 'என் வாலிபர் (ஃபதாய), என் இளம் பெண் (ஃபதாதீ), என் சிறுவன் (குலாமீ)' என்று கூறட்டும்."