உம்மு தர்தா (ரழி) அவர்கள் அபுத்தர்தா (ரழி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள். அபுத்தர்தா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதிகமாக சபிப்பவர்கள் மறுமை நாளில் சாட்சிகளாகவோ பரிந்துரை செய்பவர்களாகவோ இருக்க மாட்டார்கள்" என்று கூறக் கேட்டேன்.
அன்னையர் உம்முத் தர்தா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் அபுத்தர்தா (ரழி) அவர்கள் கூறக்கேட்டேன்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக்கேட்டேன்: (மக்களை) அதிகமாகச் சபிப்பவர்கள் (மறுமையில் பிறருக்காகப்) பரிந்துரைப்பவர்களாகவோ அல்லது (மக்களின் செயல்களுக்குச்) சாட்சியாளர்களாகவோ இருக்க மாட்டார்கள்.
وعن أبي الدرداء رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : لا يكون اللعانون شفعاء، ولا شهداء يوم القيامة ((رواه مسلم)).
அபுத்தர்தா (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அதிகமாகச் சபிப்பவர்கள், மறுமை நாளில் பரிந்துரை செய்பவர்களாகவோ, சாட்சியாளர்களாகவோ இருக்க மாட்டார்கள்."
உம்முத் தர்தா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன் என்று அபுத் தர்தா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"(பிறரை) அடிக்கடி சாபமிடுபவர்கள் (மறுமை நாளில்) சாட்சிகளாகவோ, பரிந்துரைப்பவர்களாகவோ இருக்க மாட்டார்கள்."
(இதனை இமாம் முஸ்லிம் இதே வாசகத்தில் பதிவு செய்துள்ளார்).
ஹதீஸ் தரம் : இஸ்னாதுஹு ஸஹீஹ் (இதன் அறிவிப்பாளர் தொடர் ஆதாரபூர்வமானது)