இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தான் ஒரு பெண்ணிடம் (அனுமதிக்கப்படாத செயலாக) முத்தமிட்டதாகவோ, அல்லது கையால் தொட்டதாகவோ, அல்லது (இவை போன்ற) ஏதேனும் ஒன்றைச் செய்துவிட்டதாகவோ கூறினார். அவர் அதற்குரிய பரிகாரத்தைக் கேட்பவரைப் போன்று இருந்தார். (அறிவிப்பாளர்) கூறினார்: அப்போது கண்ணியமிக்க அல்லாஹ் (குர்ஆன் வசனத்தை) அருளினான். பிறகு யஸீத் என்பவரின் ஹதீஸில் உள்ளதைப் போன்று (அறிவிப்பாளர்) குறிப்பிட்டார்.