நாங்கள் அப்துல்லாஹ் (பின் மஸ்ஊத்) (ரலி) அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தபோது, யஸீத் பின் முஆவியா வந்தார். நாங்கள் (அவரிடம்), "நீங்கள் அமரக் கூடாதா?" என்று கேட்டோம். அவர், "இல்லை! ஆயினும் நான் உள்ளே சென்று உங்கள் தோழரை உங்களிடம் வெளியே வரச் செய்வேன்; இல்லையெனில் நானே வந்து (உங்களுடன்) அமர்வேன்" என்று கூறினார்.
அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (யஸீதின்) கையைப் பிடித்தவாறு வெளியே வந்து, எங்களிடம் நின்று, "அறிந்துகொள்ளுங்கள்! நீங்கள் (எனக்காகக் காத்திருக்கும்) இடம் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆயினும், நான் உங்களிடம் வெளியே வராமல் என்னைத் தடுத்தது என்னவென்றால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாங்கள் சலிப்படைந்து விடக்கூடாது என்பதற்காக (தொடர்ந்து அறிவுரை கூறாமல்) நாட்களில் இடைவெளி விட்டு எங்களுக்கு அறிவுரை கூறுவார்கள் (என்பதே ஆகும்)" என்று கூறினார்கள்.