அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற தாம் கேட்டதாக: 'நிச்சயமாக ஓர் அடியான் ஒரு வார்த்தையை, (அது நல்லதா கெட்டதா என) ஆராய்ந்து பார்க்காமல் பேசிவிடுவான். அதன் காரணமாக அவன், கிழக்குக்கும் (மேற்குக்கும்) இடைப்பட்ட தூரத்தை விடவும் அதிகமான தூரத்தில் நரகில் சறுக்கி விழுவான்.'
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக ஓர் அடியான் ஒரு வார்த்தையை (அதன் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல்) பேசுகிறான். அதன் காரணமாக அவன், கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையிலுள்ள தூரத்தை விட அதிக தூரத்திற்கு நரக நெருப்பில் விழுகிறான்.