அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் கொட்டாவி விட்டால், அவர் தமது கையால் தமது வாயைப் பொத்திக் கொள்ளட்டும். ஏனெனில், (அப்போது) ஷைத்தான் உள்ளே நுழைகிறான்."
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ سُهَيْلٍ، عَنِ ابْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فَلْيُمْسِكْ عَلَى فِيهِ فَإِنَّ الشَّيْطَانَ يَدْخُلُ .
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி வந்தால், அவர் தமது வாயின் மீது (கையை) வைத்துக் கொள்ளட்டும். ஏனெனில், (அப்போது) ஷைத்தான் நுழைகிறான்.
وعن أبي سعيد الخدري رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : إذا تثاءب أحدكم فليمسك بيده علي فيه، فإن الشيطان يدخل ((رواه مسلم)).
அபூ ஸயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி வந்தால், அவர் தமது கையைத் தம் வாயின் மீது வைத்துக்கொள்ளட்டும். ஏனெனில், ஷைத்தான் உள்ளே நுழைகிறான் (மற்றும் கேலி செய்கிறான் அல்லது சிரிக்கிறான்)."