حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ دَاوُدَ بْنِ صَالِحِ بْنِ دِينَارٍ التَّمَّارِ، عَنْ أُمِّهِ، أَنَّ مَوْلاَتَهَا، أَرْسَلَتْهَا بِهَرِيسَةٍ إِلَى عَائِشَةَ رضى الله عنها فَوَجَدْتُهَا تُصَلِّي فَأَشَارَتْ إِلَىَّ أَنْ ضَعِيهَا فَجَاءَتْ هِرَّةٌ فَأَكَلَتْ مِنْهَا فَلَمَّا انْصَرَفَتْ أَكَلَتْ مِنْ حَيْثُ أَكَلَتِ الْهِرَّةُ فَقَالَتْ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ إِنَّهَا لَيْسَتْ بِنَجَسٍ إِنَّمَا هِيَ مِنَ الطَّوَّافِينَ عَلَيْكُمْ . وَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَتَوَضَّأُ بِفَضْلِهَا .
தாவூத் பின் ஸாலிஹ் பின் தீனார் அத்தம்மார் அவர்களின் தாயார் (கப்ஷா) அவர்கள் அறிவிக்கின்றார்:
என் எஜமானி என்னை ‘ஹரீஸா’ (எனும் உணவைக்) கொடுத்து ஆயிஷா (ரழி) அவர்களிடம் அனுப்பினார்கள். (நான் சென்றபோது) ஆயிஷா (ரழி) அவர்கள் தொழுதுகொண்டிருந்தார்கள். அதை கீழே வைக்குமாறு அவர்கள் எனக்குச் சைகை செய்தார்கள். அப்போது ஒரு பூனை வந்து அதிலிருந்து உண்டது. ஆயிஷா (ரழி) அவர்கள் தொழுகையை முடித்ததும், பூனை உண்ட இடத்திலிருந்தே அவர்களும் உண்டார்கள்.
பிறகு ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அது (பூனை) அசுத்தமானது அல்ல; நிச்சயமாக அது உங்களைச் சுற்றி வருபவைகளில் ஒன்றாகும்’ என்று கூறினார்கள்.”
மேலும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பூனை வாய் வைத்த (மீதமான) நீரைக் கொண்டு உளூச் செய்வதை நான் பார்த்திருக்கின்றேன்” என்றும் ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்.