சல்மான் (ரழி) அவர்களிடம், "உங்கள் நபி (ஸல்) அவர்கள் உங்களுக்கு எல்லாவற்றையும், மலம் கழிப்பதைப் பற்றி கூடவா கற்றுத் தருகிறார்கள்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்தார்கள்: ஆம். அவர்கள் மலம் அல்லது சிறுநீர் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்குவதையும், வலது கையால் சுத்தம் செய்வதையும், மூன்று கற்களுக்கும் குறைவாகக் கொண்டு சுத்தம் செய்வதையும், அல்லது சாணம் அல்லது எலும்பைக் கொண்டு சுத்தம் செய்வதையும் எங்களுக்குத் தடை செய்துள்ளார்கள்.