உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் அங்கசுத்தி (ஒளூ) செய்தார். அப்போது **தம் காலில்** ஒரு நகம் அளவுக்குரிய இடத்தைக் (கழுவாமல்) விட்டுவிட்டார். நபி (ஸல்) அவர்கள் அதைப் பார்த்து, “திரும்பிச் சென்று, உமது அங்கசுத்தியை (ஒளூவை) நன்கு செய்வீராக!” என்று கூறினார்கள். உடனே அவர் திரும்பிச் சென்று (நன்கு ஒளூ செய்துவிட்டுத்) தொழுதார்.