ஸமுரா பின் ஜுன்தப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யார் வெள்ளிக்கிழமையன்று உளூச் செய்கிறாரோ, (அவர் அதைச் செய்ததன் மூலம்) நன்மையைப் பெற்றுவிட்டார், அதுவே போதுமானது. மேலும், யார் குளிக்கிறாரோ, குளிப்பதே மிகச் சிறந்தது.”