அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு முடியின் கீழும் பெருந்துடக்கு (நீங்க வேண்டிய அவசியம்) இருக்கிறது; எனவே, முடியைக் கழுவி, தோலைத் தூய்மைப்படுத்துங்கள்.
அபூதாவூத் கூறினார்கள்: ஹாரித் இப்னு வஜீஹ் அறிவித்த இந்த ஹதீஸ் நிராகரிக்கப்பட்டது (முன்கர்) ஆகும். அவர் (ஹதீஸ் அறிவிப்பதில்) பலவீனமானவர்.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒவ்வொரு மயிரின் கீழும் ஜனாபத் இருக்கிறது. ஆகவே, முடியை (முழுவதுமாக) கழுவி, சருமத்தைத் தூய்மைப்படுத்துங்கள்.”