حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كُفِّنَ فِي ثَلاَثَةِ أَثْوَابٍ يَمَانِيَةٍ بِيضٍ سَحُولِيَّةٍ مِنْ كُرْسُفٍ، لَيْسَ فِيهِنَّ قَمِيصٌ وَلاَ عِمَامَةٌ.
`ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளையான, பருத்தியாலான மூன்று யமனீ சஹூலிய்யா (துணித் துண்டுகளில்) கஃபனிடப்பட்டார்கள்; அவற்றில் சட்டையோ தலைப்பாகையோ இருக்கவில்லை."
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كُفِّنَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي ثَلاَثَةِ أَثْوَابِ سَحُولَ كُرْسُفٍ، لَيْسَ فِيهَا قَمِيصٌ وَلاَ عِمَامَةٌ.
`ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸுஹுல் (ஒரு வகை பருத்தி) எனும் துணியால் ஆன மூன்று ஆடைகளால் கஃபனிடப்பட்டார்கள்; அவற்றில் சட்டையோ தலைப்பாகையோ இருக்கவில்லை.
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كُفِّنَ فِي ثَلاَثَةِ أَثْوَابٍ بِيضٍ سَحُولِيَّةٍ، لَيْسَ فِيهَا قَمِيصٌ وَلاَ عِمَامَةٌ.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெண்மையான ஸுஹுலால் ஆன மூன்று ஆடைகளில் கஃபனிடப்பட்டார்கள். அவற்றில் சட்டையோ தலைப்பாகையோ இருக்கவில்லை.