حَدَّثَنَا عَوْنُ بْنُ سَلاَّمٍ الْكُوفِيُّ، أَخْبَرَنَا زُهَيْرٌ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِرَجُلٍ قَتَلَ نَفْسَهُ بِمَشَاقِصَ فَلَمْ يُصَلِّ عَلَيْهِ .
ஜாபிர் இப்னு ஸமுரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அகன்ற முனை கொண்ட அம்புகளால் தற்கொலை செய்துகொண்ட ஒருவரின் (உடல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அவர்கள் அவருக்காக (ஜனாஸா) தொழுகை நடத்தவில்லை.