உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள், இறந்தவரை அடக்கம் செய்து முடித்ததும், அ(க்கப்ரு)க்கு அருகில் நின்று கொண்டு, “உங்கள் சகோதரருக்காக பாவமன்னிப்புக் கோருங்கள், அவருக்காக (கேள்வி பதிலில்) உறுதியைக் கேளுங்கள், ஏனெனில் அவர் இப்போது விசாரிக்கப்படுவார்” என்று கூறுவார்கள்.
அபூ தாவூத் கூறினார்கள்: அறிவிப்பாளர் புஹைரின் முழுப்பெயர் புஹைர் இப்னு ரைசான் ஆகும்.