அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவின் கப்ருகளைக் கடந்து சென்றபோது, தமது முகத்தை அவர்களை நோக்கித் திருப்பி கூறினார்கள்: (அஸ்ஸலாமு அலைக்கும் யா அஹ்லல் குபூர்! யஃக்ஃபிருல்லாஹு லனா வ லக்கும், அன்தும் ஸலஃபூனா வ நஹ்னு பில்அதர்.) 'கப்றுகளில் வசிப்பவர்களே! உங்கள் மீது சாந்தி உண்டாவதாக! அல்லாஹ் எங்களையும் உங்களையும் மன்னிப்பானாக; நீங்கள் எங்களுக்கு முன் சென்றவர்கள், நாங்கள் (உங்களைப்) பின்தொடரக்கூடியவர்கள்.'
وعن ابن عباس رضي الله عنهما، قال مر رسول الله صلى الله عليه وسلم بقبور بالمدينة فأقبل عليهم بوجهه فقال: “السلام عليكم يا أهل القبور، يغفر الله لنا ولكم أنتم سلفنا ونحن بالأثر” ((رواه الترمذي وقال: حديث حسن)).
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் உள்ள கப்ருகளைக் (சவக்கல்லறைகளைக்) கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள் அவற்றின் பக்கம் தங்கள் முகத்தைத் திருப்பி, இவ்வாறு கூறினார்கள்: “கப்ருவாசிகளே! உங்களுக்கு சாந்தி உண்டாகட்டும். அல்லாஹ் எங்களையும் உங்களையும் மன்னிப்பானாக. நீங்கள் எங்களுக்கு முன் சென்றுவிட்டீர்கள், நாங்கள் (உங்களைப்) பின்தொடர இருக்கிறோம்.”