حَدَّثَنَا أَبُو بَدْرٍ، عَبَّادُ بْنُ الْوَلِيدِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِلاَلٍ، حَدَّثَنَا عِمْرَانُ الْقَطَّانُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: دَخَلَ رَمَضَانُ. فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِنَّ هَذَا الشَّهْرَ قَدْ حَضَرَكُمْ وَفِيهِ لَيْلَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ مَنْ حُرِمَهَا فَقَدْ حُرِمَ الْخَيْرَ كُلَّهُ وَلاَ يُحْرَمُ خَيْرَهَا إِلاَّ مَحْرُومٌ .
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
“ரமளான் மாதம் துவங்கியது, அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இந்த மாதம் உங்களிடம் வந்துவிட்டது, அதில் ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த ஓர் இரவு இருக்கிறது. யார் அதன் பாக்கியத்தை இழந்துவிடுகிறாரோ, அவர் சகல நன்மைகளையும் இழந்துவிடுகிறார். மேலும், பாக்கியமற்றவரைத் தவிர வேறு எவரும் அதன் நன்மையை இழப்பதில்லை.’”