உம்மு குர்ஸ் அல்-காபிய்யா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆண் குழந்தைக்காக ஒன்றையொன்று ஒத்த இரு ஆடுகளும், பெண் குழந்தைக்காக ஓர் ஆடும் அறுக்கப்பட வேண்டும்” என்று கூற நான் கேட்டேன்.
அபூதாவூத் கூறினார்கள்: அஹ்மத் (இப்னு ஹன்பல்) அவர்கள், “அரபு வார்த்தையான முகாஃபிஅதானி என்பதன் பொருள் (வயதில்) சமமான அல்லது ஒன்றையொன்று ஒத்தவை என்பதாகும்” என்று கூற நான் கேட்டேன்.