இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2517ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنِي وَاقِدُ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنِي سَعِيدٌ ابْنُ مَرْجَانَةَ، صَاحِبُ عَلِيِّ بْنِ حُسَيْنٍ قَالَ لِي أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ ‏ أَيُّمَا رَجُلٍ أَعْتَقَ امْرَأً مُسْلِمًا اسْتَنْقَذَ اللَّهُ بِكُلِّ عُضْوٍ مِنْهُ عُضْوًا مِنْهُ مِنَ النَّارِ ‏ ‏‏.‏ قَالَ سَعِيدٌ ابْنُ مَرْجَانَةَ فَانْطَلَقْتُ إِلَى عَلِيِّ بْنِ حُسَيْنٍ فَعَمَدَ عَلِيُّ بْنُ حُسَيْنٍ ـ رضى الله عنهما ـ إِلَى عَبْدٍ لَهُ قَدْ أَعْطَاهُ بِهِ عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ عَشَرَةَ آلاَفِ دِرْهَمٍ ـ أَوْ أَلْفَ دِينَارٍ ـ فَأَعْتَقَهُ‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எந்த ஒரு மனிதர் ஒரு முஸ்லிம் (அடிமை) மனிதரை விடுதலை செய்கிறாரோ, அல்லாஹ் (அந்த அடிமையின்) ஒவ்வொரு உறுப்புக்கும் பகரமாக இவருடைய ஒவ்வொரு உறுப்பையும் நரகத்திலிருந்து விடுவிப்பான்."

(அறிவிப்பாளர்) ஸயீத் பின் மர்ஜானா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நான் (இச்செய்தியைச் சொல்வதற்காக) அலீ பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடம் சென்றேன். உடனே அலீ பின் ஹுஸைன் (ரலி) அவர்கள், அப்துல்லாஹ் பின் ஜஃபர் அவர்கள் பத்தாயிரம் திர்ஹம்கள் -அல்லது ஓராயிரம் தீனார்கள்- கொடுத்துக் கேட்டிருந்த தம் அடிமையை நோக்கிச் சென்று, அவரை விடுதலை செய்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1509 dஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِي حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا عَاصِمٌ، - وَهُوَ ابْنُ مُحَمَّدٍ الْعُمَرِيُّ - حَدَّثَنَا وَاقِدٌ، - يَعْنِي أَخَاهُ - حَدَّثَنِي سَعِيدُ ابْنُ مَرْجَانَةَ، - صَاحِبُ عَلِيِّ بْنِ حُسَيْنٍ - قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ أَيُّمَا امْرِئٍ مُسْلِمٍ أَعْتَقَ امْرَأً مُسْلِمًا اسْتَنْقَذَ اللَّهُ بِكُلِّ عُضْوٍ مِنْهُ عُضْوًا مِنْهُ مِنَ النَّارِ ‏ ‏ ‏.‏ قَالَ فَانْطَلَقْتُ حِينَ سَمِعْتُ الْحَدِيثَ مِنْ أَبِي هُرَيْرَةَ فَذَكَرْتُهُ لِعَلِيِّ بْنِ الْحُسَيْنِ فَأَعْتَقَ عَبْدًا لَهُ قَدْ أَعْطَاهُ بِهِ ابْنُ جَعْفَرٍ عَشْرَةَ آلاَفِ دِرْهَمٍ أَوْ أَلْفَ دِينَارٍ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"எந்தவொரு முஸ்லிம் ஒரு முஸ்லிம் அடிமையை விடுதலை செய்கிறாரோ, (அந்த அடிமையின்) ஒவ்வொரு உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவரின்) ஒவ்வொரு உறுப்பையும் நரக நெருப்பிலிருந்து அல்லாஹ் விடுவிப்பான்."

ஸயீத் இப்னு மர்ஜானா அவர்கள் கூறினார்கள்: நான் இந்த ஹதீஸை அபூ ஹுரைரா (ரழி) அவர்களிடமிருந்து கேட்டபோது, நான் சென்று இதனை அலீ இப்னு ஹுஸைன் அவர்களிடம் குறிப்பிட்டேன். உடனே அவர் தமக்குச் சொந்தமான ஓர் அடிமையை விடுதலை செய்தார். அந்த அடிமைக்காக இப்னு ஜஃபர் அவர்கள் பத்தாயிரம் திர்ஹம்கள் அல்லது ஆயிரம் தீனார்கள் கொடுத்திருந்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح