நவ்வாஸ் இப்னு சம்ஆன் அல்அன்சாரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நன்மை மற்றும் தீமைப் பற்றி கேட்டேன். அவர்கள் கூறினார்கள்: நன்மை என்பது நற்குணமாகும்; தீமை என்பது உமது உள்ளத்தில் உறுத்துவதும், மக்கள் அதனை அறிவதை நீர் வெறுப்பதுமாகும்.