ஒரு பெண்மணி தம் குழந்தையுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! இவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். ஏனெனில், நான் மூன்று (குழந்தைகளை) நல்லடக்கம் செய்துவிட்டேன்" என்று கூறினார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ மூன்று (குழந்தைகளை) நல்லடக்கம் செய்துவிட்டாயா?" என்று கேட்டார்கள்.
அப்பெண் "ஆம்" என்றார்.
நபி (ஸல்) அவர்கள், "நரகத்திலிருந்து (உன்னைக் காக்க) நிச்சயமாக ஒரு வலுவான தடுப்பை நீ ஏற்படுத்திக்கொண்டாய்" என்று கூறினார்கள்.