அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இவ்வாறு) கூறினார்கள் என அறிவித்தார்கள்:
ஒரு நம்பிக்கையுள்ள அடிமைக்கு இரண்டு நற்கூலிகள் உண்டு. அபூ ஹுரைராவின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத், ஹஜ் மற்றும் என் தாயாருக்கு நன்மை செய்தல் ஆகியவை இல்லாவிட்டால், நான் ஒரு அடிமையாக இறப்பதையே விரும்பியிருப்பேன்.
(அறிவிப்பாளர் தொடரில் உள்ள ஒருவரான) அவர் கூறினார்கள்: அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், அன்னாரின் பணிவிடையில் (தொடர்ந்து தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்ததால்) தமது தாயார் இறக்கும் வரை ஹஜ் செய்யவில்லை என்ற செய்தி எங்களுக்கு எட்டியது.