இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

6149ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ أَتَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى بَعْضِ نِسَائِهِ وَمَعَهُنَّ أُمُّ سُلَيْمٍ فَقَالَ ‏"‏ وَيْحَكَ يَا أَنْجَشَةُ، رُوَيْدَكَ سَوْقًا بِالْقَوَارِيرِ ‏"‏‏.‏ قَالَ أَبُو قِلاَبَةَ فَتَكَلَّمَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِكَلِمَةٍ، لَوْ تَكَلَّمَ بَعْضُكُمْ لَعِبْتُمُوهَا عَلَيْهِ قَوْلُهُ ‏"‏ سَوْقَكَ بِالْقَوَارِيرِ ‏"‏‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியர் சிலரிடம் வந்தார்கள்; அவர்களுடன் உம்மு சுலைம் (ரழி) அவர்களும் இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அன்ஜஷாவே! (அல்லாஹ் உனக்குக் கருணை புரிவானாக!) கண்ணாடிப் பாத்திரங்களை (மிக) மெதுவாக ஓட்டிச் செல்வீராக!" என்று கூறினார்கள்.

அபூ கிலாபா கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒரு வார்த்தையைச் சொன்னார்கள். உங்களில் ஒருவர் அதனைச் சொல்லியிருந்தால், அதற்காக நீங்கள் அவரைக் குறை கண்டிருப்பீர்கள். (அது:) 'கண்ணாடிப் பாத்திரங்களை (மெதுவாக) ஓட்டிச் செல்' (எனும் வார்த்தையாகும். அதாவது, பெண்களை கண்ணாடிப் பாத்திரங்களுடன் ஒப்பிட்டது).
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح