இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

157 jஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ، - يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ - عَنْ سُهَيْلٍ،
عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى
يَكْثُرَ الْهَرْجُ ‏"‏ ‏.‏ قَالُوا وَمَا الْهَرْجُ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ الْقَتْلُ الْقَتْلُ ‏"‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“மறுமை நாள் (உலக முடிவு) ‘ஹர்ஜ்’ அதிகரிக்காத வரை ஏற்படாது.”
(நபித்தோழர்கள்) கேட்டார்கள்: “அல்லாஹ்வின் தூதரே! ‘ஹர்ஜ்’ என்றால் என்ன?”
அதற்கு அவர்கள் கூறினார்கள்: “கொலை! கொலை!”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح