நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியான ஜுவைரியா (ரழி) அவர்களின் (முந்தைய) பெயர் பர்ரா (பக்தியுள்ளவர்) என்றிருந்ததாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரின் பெயரை ஜுவைரியா என்று மாற்றிவிட்டு (பின்வருமாறு) கூறினார்கள்: "அவர் பர்ரா (பக்தியுள்ளவர்) அவர்களிடமிருந்து புறப்பட்டுவிட்டார்" என்று சொல்லப்படுவதை நான் விரும்பவில்லை.
இப்னு அபீ உமர் (ரழி) அவர்கள் அறிவித்த ஹதீஸ் இதிலிருந்து சற்று வித்தியாசமாக உள்ளது.