حَدَّثَنِي أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ وَابْنُ أَبِي عُمَرَ - قَالَ أَبُو كُرَيْبٍ أَخْبَرَنَا وَقَالَ،
ابْنُ أَبِي عُمَرَ حَدَّثَنَا وَاللَّفْظُ، لَهُ - قَالاَ حَدَّثَنَا مَرْوَانُ، - يَعْنِيَانِ الْفَزَارِيَّ - عَنْ حُمَيْدٍ، عَنْ
أَنَسٍ، قَالَ نَادَى رَجُلٌ رَجُلاً بِالْبَقِيعِ يَا أَبَا الْقَاسِمِ . فَالْتَفَتَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله
عليه وسلم . فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَمْ أَعْنِكَ إِنَّمَا دَعَوْتُ فُلاَنًا . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى
الله عليه وسلم تَسَمَّوْا بِاسْمِي وَلاَ تَكَنَّوْا بِكُنْيَتِي .
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
பகீஃ என்னுமிடத்தில் ஒரு மனிதர் மற்றொருவரை "ஓ அபுல் காசிமே!" என்று அழைத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை நோக்கித் திரும்பினார்கள். உடனே அம்மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! நான் தங்களைக் குறிப்பிடவில்லை; மாறாக, இன்னாரைத்தான் அழைத்தேன்" என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் பெயரைச் சூட்டிக் கொள்ளுங்கள்; ஆனால் என் குன்யாவைச் சூட்டிக்கொள்ளாதீர்கள்" என்று கூறினார்கள்.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்; அபுல் காஸிம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"என் பெயரால் (உங்கள் பிள்ளைகளுக்குப்) பெயரிடுங்கள்; ஆனால் என் குன்யாவால் (அபுல் காஸிம் என்ற குன்யாவால்) குன்யா சூட்டாதீர்கள்."
அம்ர், "அபூ ஹுரைரா (ரழி) அவர்களிடமிருந்து" என்று கூறினார்; "நான் செவியுற்றேன்" என்று கூறவில்லை.
حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدِ بْنِ كَثِيرِ بْنِ دِينَارٍ الْحِمْصِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عِرْقٍ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ بُسْرٍ، يَقُولُ قَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ طُوبَى لِمَنْ وَجَدَ فِي صَحِيفَتِهِ اسْتِغْفَارًا كَثِيرًا .
அப்துல்லாஹ் இப்னு புஸ்ர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எவர் தனது (செயல்) பதிவேட்டில் அதிகமான பாவமன்னிப்பு தேடுதலைக் காண்கிறாரோ அவருக்கு 'தூபா' (நற்பாக்கியம்) உண்டாகட்டும்."
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் ஒருவர் பாவமன்னிப்புக் கோருவதை (தொடர்ந்து) வழக்கமாகக் கொள்கிறாரோ, அவருக்கு ஒவ்வொரு கவலையிலிருந்தும் அல்லாஹ் ஒரு நிவாரணத்தை ஏற்படுத்துவான், மேலும் ஒவ்வொரு நெருக்கடியிலிருந்தும் ஒரு வெளியேறும் வழியை ஏற்படுத்துவான், மேலும் அவர் நினைத்துப் பார்க்காத வழிகளிலிருந்து அவருக்கு வாழ்வாதாரத்தை வழங்குவான்."