அபூசயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டேன்: அமர்வதற்குரிய இடங்களில் மிகச் சிறந்தது, விசாலமான இடமே ஆகும்.
அபூதாவூத் அவர்கள் கூறினார்கள்: 'அப்துர்ரஹ்மான் இப்னு அபீ அம்ர்' என்பவரின் பெயர் 'அப்துர்ரஹ்மான் இப்னு அம்ர் இப்னு அபீ உம்ரத் அல்அன்சாரி' ஆகும்.