நபி (ஸல்) அவர்கள், ஒருவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து அவரை எழுப்பிவிட்டு அவ்விடத்தில் மற்றொருவர் அமர்வதை தடைசெய்தார்கள், ஆனால் (அங்கே இருப்பவர்கள்) இடத்தை ஏற்படுத்திக் கொடுத்து விசாலமாக அமர வேண்டும் (என்று கூறினார்கள்).
இப்னு உமர் (ரழி) அவர்கள், ஒருவர் தம்முடைய இடத்திலிருந்து எழுந்து சென்ற பிறகு, அவ்விடத்தில் வேறு ஒருவர் அமர்வதை வெறுத்தார்கள்.
இப்னு உமர் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:
உங்களில் எவரும் மற்றொருவரைச் சபையில் எழுப்பிவிட்டு, பின்னர் அவரது இடத்தில் அமர வேண்டாம்.