حَدَّثَنَا عُثْمَانُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم {إِذَا كُنْتُمْ ثَلاَثَةً فَلاَ يَتَنَاجَى رَجُلاَنِ دُونَ الآخَرِ، حَتَّى تَخْتَلِطُوا بِالنَّاسِ، أَجْلَ أَنْ يُحْزِنَهُ}.
அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "நீங்கள் மூவராக இருக்கும்போது, மற்றவர்களுடன் (கூட்டமாக) கலக்கும் வரை, உங்களில் இருவர் மூன்றாவது நபரைத் தவிர்த்துவிட்டு இரகசியமாகப் பேச வேண்டாம். ஏனெனில் அது அவருக்கு வருத்தத்தை அளிக்கும்."