அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடைய மாமாவிடம், "'லா இலாஹ இல்லல்லாஹ்' (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று கூறுங்கள். மறுமை நாளில் இதைக் கொண்டு நான் உங்களுக்காகச் சாட்சி கூறுவேன்" என்று கூறினார்கள்.
அதற்கு அவர், "குறைஷிகள் என்னைக் குறை கூறுவார்கள்; (மரண) நடுக்கம்தான் அவரை இவ்வாறு செய்யத் தூண்டியது என்று அவர்கள் சொல்வார்கள் என்ற அச்சம் இல்லாவிட்டால், (இதைச் சொல்லி) நான் நிச்சயமாக உனது கண்களைக் குளிரச் செய்திருப்பேன்" என்று கூறினார்.
அப்போது அல்லாஹ் (பின்வரும் வசனத்தை) அருளினான்: "{இன்னக்க லா தஹ்தீ மன் அஹ்பப்த வலாகின்னல்லாஹ யஹ்தீ மன் யஷாலு} - (நபியே!) நிச்சயமாக நீங்கள் நேசிப்பவரை உங்களால் நேர்வழியில் செலுத்த முடியாது; எனினும், அல்லாஹ் தான் நாடியவரை நேர்வழியில் செலுத்துகிறான்."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய இரண்டு (சுன்னத்தான) ரக்அத்களில் "குல் யா அய்யுஹல் காஃபிரூன்" மற்றும் "குல் ஹுவல்லாஹு அஹத்" ஆகியவற்றை ஓதினார்கள்.