الثاني: عن ابن مسعود رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: ما من نبي بعثه الله في أمة قبلي إلا كان له من أمته حواريون وأصحاب يأخذون بسنته ويقتدون بأمره، ثم إنها تختلف من بعدهم خلوف يقولون مالا يفعلون ويفعلون ما لا يؤمرون، فمن جاهدهم بيده فهو مؤمن، ومن جاهدهم بقلبه فهو مؤمن، ومن جاهدهم بلسانه فهو مؤمن ، وليس وراء ذلك الإيمان حبة خردل ((رواه مسلم)).
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "எனக்கு முன் அல்லாஹ் எந்தவொரு நபியை (அலை) அவருடைய சமூகத்திற்கு அனுப்பினாலும், அவருக்கு அவருடைய வழிமுறைகளைப் பின்பற்றி, அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்த சீடர்களும் தோழர்களும் அவருடைய மக்களிடையே இருந்தார்கள். பிறகு அவர்களுக்குப் பின்னால், தாங்கள் செய்யாததைச் சொல்லக்கூடிய, தங்களுக்குக் கட்டளையிடப்படாததைச் செய்யக்கூடிய சந்ததியினர் வந்தார்கள். ஆகவே, அவர்களுக்கு எதிராகத் தனது கையால் போராடுபவர் ஒரு முஃமின் ஆவார்; தனது உள்ளத்தால் அவர்களுக்கு எதிராகப் போராடுபவர் ஒரு முஃமின் ஆவார்; தனது நாவால் அவர்களுக்கு எதிராகப் போராடுபவர் ஒரு முஃமின் ஆவார்; இதற்கு அப்பால் கடுகளவும் ஈமான் (விசுவாசம்) இல்லை".