அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறினான்: நான் என் அடியார்களுக்கு எந்த அருட்கொடையையும் வழங்கினாலும், அவர்களில் ஒரு சாரார் அதைக் கொண்டு (எனக்கு நன்றி செலுத்தாமல், அருட்கொடையை எனக்குச் சாராமல்) நிராகரிப்பவர்களாக ஆகிவிடுகின்றனர். (அவர்கள்) 'நட்சத்திரத்தால் (இது நிகழ்ந்தது), நட்சத்திரத்தின் மூலமே (இது கிடைத்தது)' என்று கூறுகிறார்கள்."